/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரி டிரைவரை தாக்கிய 4 பேருக்கு 'காப்பு'
/
லாரி டிரைவரை தாக்கிய 4 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜன 22, 2024 10:47 AM
சேலம்: திருச்சி மாவட்டம் முசிறி அருகே பூதப்படியை சேர்ந்த, லாரி டிரைவர் வடிவேல், 43. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு, சரக்கு லாரியில் நாமக்கல் நோக்கி சென்றுகொண்டிருந்தார். கொண்டலாம்பட்டி பைபாஸில் இருந்து சீலநாயக்கன்பட்டி நோக்கி சென்றபோது, பின் தொடர்ந்து இரு பைக்குகளில் வந்த, 4 பேர், லாரியை வழிமறித்தனர். தொடர்ந்து, 'ஏன் வழிவிடாமல் செல்கிறீர்கள்' என கேள்வி எழுப்பினர். இதில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த, 4 பேர் கும்பல், வடிவேலுவை தாக்கினர்.
காயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து, தாக்குதலில் ஈடுபட்ட, அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த அருள்முருகன், 24, ஆகாஷ், 25, பிரபாகரன், 21, சுனில்குமார்,21, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.