/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரி டிரைவரை தாக்கி மொபைல் பறித்த 4 திருநங்கைகள் கைது
/
லாரி டிரைவரை தாக்கி மொபைல் பறித்த 4 திருநங்கைகள் கைது
லாரி டிரைவரை தாக்கி மொபைல் பறித்த 4 திருநங்கைகள் கைது
லாரி டிரைவரை தாக்கி மொபைல் பறித்த 4 திருநங்கைகள் கைது
ADDED : ஆக 19, 2025 01:32 AM
சேலம், மதுரை மாவட்டம், மேலுார் சூரக்குண்டு பகுதியை சேர்ந்தவர் தவம், 40. இவர் சங்ககிரியில் உள்ள ஆர்.எஸ்.கே. டிரான்ஸ்போர்ட்டில் லாரி டிரைவாக உள்ளார். கடந்த, 14ல் தவம் தனது சொந்த ஊரான மதுரைக்கு செல்ல இரவு, 10:30 மணியளவில் சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட்
வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த 4 திருநங்கைகள், தவத்தை தடுத்து நிறுத்தி சட்டை மேல்பாக்கெட்டில் இருந்த மொபைல்போனை பறித்து கொண்டு, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும் தகராறில் ஈடுபட்டு, கீழே இருந்த கல்லால் தவத்தை தாக்கி அங்கிருந்து தப்பியுள்ளனர்.
படுகாயமடைந்த தவத்தை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, மொபைல்போன் பறித்த மெய்யனுார் சாத்திரிகா, 25, மெய்யனுார், புதுத்தெருவை சேர்ந்த ரங்கீலா என்ற வேதாஸ்ரீ, 22, பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சோலையம்மாள், 25, மஜ்ரா கொல்லப்பட்டியை சேர்ந்த விசித்ரா, 24, ஆகிய நான்கு திருநங்கைகளை கைது செய்து, அவர்களிடம் இருந்து மொபைல்போனை மீட்டனர்.