/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழையால் சீதாமலை சாலையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை
/
மழையால் சீதாமலை சாலையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை
மழையால் சீதாமலை சாலையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை
மழையால் சீதாமலை சாலையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை
ADDED : டிச 03, 2024 07:03 AM
மேட்டூர்: தொடர் மழையால், மேட்டூர் சீதாமலை சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல
தடை விதிக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து பழைய காவிரி பாலம் வழியாக, 4 கி.மீ., துாரம்
சீதாமலை நெடுஞ்சாலை உள்ளது. சேலம், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து வரும்
நான்கு சக்கர வாக-னங்கள் சீதாமலை வழியாக மேட்டூர் வரும். மேட்டூரில் கடந்த, 30ல்,
8.2 மி.மீ., நேற்று முன்தினம், 44 மி.மீ., மழை பெய்தது. நேற்று காலை முதல் லேசான
சாரல் மழை தொடர்ச்சியாக பெய்-தது. மழையால் நேற்று முன்தினம் அதிகாலை
சீதாமலை பாறையில் இருந்து ஒரு கல் பெயர்ந்து சாலையில் விழுந்தது.இதனால் இரவில், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தால் பாதிக்கும் நிலை
ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி முதல் சீதாமலை
சாலையில் கார், வேன், லாரி உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை
விதிக்கப்பட்டது.அதற்காக சேலம்கேம்ப் மற்றும் காவிரி பாலம் பகுதிகளில் தடுப்-புகள் அமைத்து
ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடு-பட்டனர். எனினும், இரு சக்கர
வாகனங்கள் சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டன.