/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிலாளர்களை கத்தியால் வெட்டிய சகோதரர்களுக்கு தலா 4 ஆண்டு சிறை
/
தொழிலாளர்களை கத்தியால் வெட்டிய சகோதரர்களுக்கு தலா 4 ஆண்டு சிறை
தொழிலாளர்களை கத்தியால் வெட்டிய சகோதரர்களுக்கு தலா 4 ஆண்டு சிறை
தொழிலாளர்களை கத்தியால் வெட்டிய சகோதரர்களுக்கு தலா 4 ஆண்டு சிறை
ADDED : செப் 21, 2024 06:50 AM
சங்ககிரி: இடைப்பாடி, குருக்கப்பட்டியை சேர்ந்த கூட்டுறவு ரேஷன் கடை விற்பனையாளர் சித்தையன். இவரது உறவினர் சின்னுசாமிக்கும், அருகே உள்ள
முனியப்பன் குடும்பத்தினரும் இடையே, 2015 அக்., 16ல் தகராறு ஏற்பட்டது. அப்போது சின்னுசாமி, சித்தையனை அழைத்துள்ளார். உடனே சித்தையன், அவரது உறவினர்களான, தொழிலாளர்கள் குமார், கோவிந்தன், குமரவேல் ஆகியோருடன் சென்றார். இவர்களுக்கும் முனியப்பன் வீட்டில் இருந்த ஆறுமுகம் மகன்க-ளான ராஜா, லோகநாதனுக்கும் தகராறு ஏற்பட்டது.
ராஜா, லோகநாதன் ஆகியோர், சித்தையன் தரப்பினரை தாக்கினர். குறிப்பாக குமார், குமரவேலை, சகோதரர்கள் ராஜா, லோகநாதன் கத்தியால் வெட்டினர். இருவரும் பலத்த காயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து சித்தையன் புகார்படி பூலாம்பட்டி போலீசார் வழக்-குப்பதிந்தனர். இந்த வழக்கு சங்ககிரி உதவி அமர்வு நீதிமன்-றத்தில் நடந்தது.
அதில் நீதிபதி பன்னீர்செல்வம் நேற்று, சகோத-ரர்களுக்கு தலா, 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். மேலும் ராஜாவுக்கு, 2,000,
லோகநாதனுக்கு, 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.