ADDED : மே 23, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : ஏற்காட்டில், 41 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை பதிவான மழை அளவு விபரம்: ஏற்காடு, 41 மி.மீ., இடைப்பாடி, 35.4, சேலம், 27.8, டேனிஷ்பேட்டை, 18.2, ஆணைமடுவு, 15, ஏத்தாப்பூர், 11.5, வாழப்பாடி, 11, ஆத்துார், 10.2, மேட்டூர், 9.8, ஓமலுார், 7.8, சங்ககிரி, 3.3, கரியகோவில், 3 மி.மீ.,
இடி, மின்னலுடன் மழைஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நரசிங்கபுரம், தென்னங்குடிபாளையம், கல்லாநத்தம், அம்மம்பாளையம், ராமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை, 5:00 மணிக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

