/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தமிழகத்தில் 41,200 மனு நிலுவை; மாநில தகவல் கமிஷனர் ஒப்புதல்
/
தமிழகத்தில் 41,200 மனு நிலுவை; மாநில தகவல் கமிஷனர் ஒப்புதல்
தமிழகத்தில் 41,200 மனு நிலுவை; மாநில தகவல் கமிஷனர் ஒப்புதல்
தமிழகத்தில் 41,200 மனு நிலுவை; மாநில தகவல் கமிஷனர் ஒப்புதல்
ADDED : டிச 27, 2025 08:04 AM
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில், பொது தகவல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்களுடன் கலந்துரையாடல், நேற்று நடந்தது.
இதுகுறித்து மாநில தகவல் கமிஷனர் பிரியகுமார் கூறியதாவது: தமிழக தகவல் கமிஷனுக்கு, மாதந்தோறும் பல்வேறு துறைகள் சார்பில், 2,000 மனுக்கள் வருகின்றன. கடந்த நவ., 30 வரை, 41,200 மனுக்கள் நிலுவையிலும், 2,023 மனுக்கள் நிறைவு-பெறும் தருவாயிலும் உள்ளன. மனுதாரரின் மனு மீது, 30 நாளில் தீர்வு காண வேண்டும். வேறு துறை சார்ந்ததாக இருந்தால், அதை, 5 நாளில் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்ப வேண்டும்.
உரிய காலத்தில், தகுந்த பதில் வழங்க தவறினால் சம்பந்தப்-பட்ட அலுவலர்கள் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். அதை தவிர்க்க, பொது தகவல் அலுவலர்கள், மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மனுதாரர் கேள்வி எழுப்பும்போது, அதை தெளிவாக குறிப்-பிட வேண்டும்.
மாவட்டந்தோறும் பல்வேறு துறைகள் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கென பொது தகவல் அலுவலர்கள் உள்ளனர். இன்றைய கலந்தாய்வு கூட்டத்தில், வேளாண், உயர்க்கல்வி, நெடுஞ்சாலை துறைகளில், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பொது தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவ-லர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.

