/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின் செயற்பொறியாளர் 42 பேருக்கு பதவி உயர்வு
/
மின் செயற்பொறியாளர் 42 பேருக்கு பதவி உயர்வு
ADDED : அக் 19, 2025 02:38 AM
சேலம்: தமிழக மின் வாரியத்தில் செயற்பொறியாளர், 42 பேர், மேற்-பார்வை பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதற்-கான உத்தரவை மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்-துள்ளார். அதன்படி சேலம் மின்மாற்றி பொது கட்டுமானம் ஜெயக்குமார், கரூர் மேற்பார்வை பொறியாளராக நியமிக்கப்பட்-டுள்ளார்.அதேபோல் வாழப்பாடி கோட்டம் குணவர்த்தினி, கோவை வடக்கு; ஈரோடு மரிய ஆரோக்கியம், ஊராட்சி கோட்டை, மின் உற்பத்தி; ஈரோடு திட்டப்பிரிவு சாந்தி, சேலம் இயக்கம்; ஊராட்-சிகோட்டை மின் உற்பத்தி சித்திக் பாத்திமா, மேட்டூர் அனல் மின்-நிலையம்; பல்லடம் இயக்கம் சாந்தநாயகி, நீலகிரி மேற்பார்வை பொறியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் உள்பட தமிழகம் முழுதும்,
42 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.