ADDED : செப் 30, 2026 06:10 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்; அக்., 2ல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஆத்-துாரில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, ரோட்-டரி கிளப், ஆத்துார் மிட்டவுன் ரோட்டரி, பாரதி மகாத்மா பண்பாட்டு பேரவை உள்ளிட்ட அமைப்-புகள் சார்பில், ரத்த தானம் முகாம் நேற்று நடந்-தது.
ரெட்கிராஸ் சேர்மன் ஜோசப் தளியத் தொடங்கி வைத்து, 78ம் முறையாக ரத்த தானம் வழங்-கினார். தொடர்ந்து, மாணவியர், தன்னார்வர்கள் உள்பட, 45 பேர் ரத்த தானம் வழங்கினர். ரெட் கிராஸ் துணை சேர்மன் ஹபிப் உசேன், செயலர்
சுந்தர்ராஜ் உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர் பங்கேற்றனர்.
