/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
45 பவுன் நகை திருட்டு2 தனிப்படை அமைப்பு
/
45 பவுன் நகை திருட்டு2 தனிப்படை அமைப்பு
ADDED : ஏப் 17, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:ஆத்துார், உப்பு ஓடையை சேர்ந்த விவசாயி பழனிவேல், 53. இவரது வீட்டில், 45 பவுன் நகைகள், 3.50 லட்சம் ரூபாய், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை, மர்ம நபர்கள், கடந்த, 13ல் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து ஆத்துார் டவுன் போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்நிலையில் ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் இரு தனிப்படை அமைத்து, 'சிசிடிவி' கேமராக்களில் பதிவான காட்சிகள், கைரேகை தடயங்கள் அடிப்படையில் விசாரிக்கின்றனர்.