/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விவசாயி வீட்டில் 45 பவுன், ரூ.3.50 லட்சம் திருட்டு
/
விவசாயி வீட்டில் 45 பவுன், ரூ.3.50 லட்சம் திருட்டு
விவசாயி வீட்டில் 45 பவுன், ரூ.3.50 லட்சம் திருட்டு
விவசாயி வீட்டில் 45 பவுன், ரூ.3.50 லட்சம் திருட்டு
ADDED : ஏப் 15, 2025 06:30 AM
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார், உப்பு ஓடை, வடக்குகாட்டை சேர்ந்த விவசாயி பழனிவேல், 53; இவரது மனைவி வசந்தி, 50; தம்பதியருக்கு இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமண-மாகி விட்டது. புற்றுநோய் பாதிப்பால் மனைவி வசந்தி இறந்-ததால், 26 நாட்களாக வீட்டை பூட்டி விட்டு, தோட்டத்து வீட்டில் பழனிவேல் இரவில் துாங்கி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தோட்டத்து வீட்டுக்கு சென்றவர், நேற்று காலை, 7:00 மணிக்கு வீட்டுக்கு வந்தார். வெளிப்புற கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, ஆத்துார் டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தார். டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் வந்தனர். பீரோவில் வைத்திருந்த, 45 பவுன் நகை, 3.50 லட்சம் ரூபாய், வெள்ளி டம்ளர், குத்துவிளக்கு உள்பட ஒரு கிலோ எடையிலான வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரிந்தது. வீட்டின் வெளிப்புறம் மற்றும் உள்புறம் இருந்த 'சிசிடிவி' கேம-ராக்களும் உடைக்கப்பட்டிருந்தது. கைரேகை நிபுணர் குழு தட-யங்களை சேகரித்தனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடந்த திருட்டு, அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.