ADDED : செப் 26, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உண்டியல்களில், பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று நடந்தது. உதவி கமிஷனர் விமலா, சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராஜா முன்னிலையில், அறநிலையத்துறை ஊழியர்கள், பக்தர்கள், காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 2 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், 4.79 லட்சம் ரூபாய், 22 கிராம் தங்கம், 460 கிராம் வெள்ளி இருந்தன.
அதேபோல் ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த தற்காலிக உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில், 1.03 லட்சம் ரூபாய் இருந்தது.