/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காவிரி உபரிநீர் திட்டத்தில் 49 ஏரிகள் நிரம்பியுள்ளதுஅமைச்சர் ராஜேந்திரன்
/
காவிரி உபரிநீர் திட்டத்தில் 49 ஏரிகள் நிரம்பியுள்ளதுஅமைச்சர் ராஜேந்திரன்
காவிரி உபரிநீர் திட்டத்தில் 49 ஏரிகள் நிரம்பியுள்ளதுஅமைச்சர் ராஜேந்திரன்
காவிரி உபரிநீர் திட்டத்தில் 49 ஏரிகள் நிரம்பியுள்ளதுஅமைச்சர் ராஜேந்திரன்
ADDED : டிச 24, 2024 07:42 AM
இடைப்பாடி: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில், கொங்க-ணா புரம் மற்றும் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்-பட்ட கன்னந்தேரி ஏரி, கொல்லப்பட்டி ஏரி, ஏகாபுரம் ஏரி, வெள்-ளாளபுரம் ஏரி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளுடனான சந்-திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அப்போது அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவதுஅனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். மேட்டூர் உபரி நீர் திட்டத்தின் கீழ் கடந்த, 14 முதல் வெள்ளாளபுரம் துணை நீரேற்று நிலையத்திலிருந்து நீரேற்றம் செய்யப்பட்டதில் ஏகாபுரம் ஏரி, கொல்லப்பட்டி ஏரி, இராமகவுண்டன் குட்டை, கன்னந்தேரி ஏரி ஆகியவை முழுமையாக நிரம்பி உள்ளது. கன்னந்தேரி துணை நீரேற்று நிலையத்திலிருந்து கடந்த, 16ல் நீரேற்றம் செய்-யப்பட்டதில் நல்லதண்ணிக்குட்டை, மாங்குட்டப்பட்டி பெரி-யேரி உள்ளிட்ட ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. உபரிநீர் திட்டத்தில் தற்போது வரை, 49 ஏரிகள் நிரம்பி உள்ளன.
சேலம் மாவட்டத்தில், 26 முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து, 20 ஆயிரம் கோரிக்கை மனுக்கள் நேரடியாக பெறப்பட்டு, 15 ஆயிரத்து, 500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். கன்னந்தேரி, ஏகாபுரம், கொல்லப்பட்டி, வெள்ளாளபுரம் ஏரிக-ளையும் நேரில் ஆய்வு செய்தார். கலெக்டர் பிருந்தா தேவி, சேலம் எம்.பி., செல்வகணபதி, நீர்வளத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜாராம் உடனிருந்தனர்.