/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண்ணிடம் பேசிய வாலிபர் வீட்டை சேதப்படுத்திய 5 பேர் கைது
/
பெண்ணிடம் பேசிய வாலிபர் வீட்டை சேதப்படுத்திய 5 பேர் கைது
பெண்ணிடம் பேசிய வாலிபர் வீட்டை சேதப்படுத்திய 5 பேர் கைது
பெண்ணிடம் பேசிய வாலிபர் வீட்டை சேதப்படுத்திய 5 பேர் கைது
ADDED : ஜூலை 20, 2025 05:41 AM
சேலம்: சேலம், தாதம்பட்டி, காந்திஜி நகரை சேர்ந்தவர் ராம்ஜி, 28. இவரும், அதே பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் மனைவி சவுமிய பிரியா, 27, ஆகியோர் நெருங்கி பழகினர். இந்த பிரச்னையால், கணவரை பிரிந்த சவு-மிய பிரியா, 5 மாதங்களாக ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டில், குழந்தைகளுடன் வசிக்கிறார்.
கடந்த, 14ல் மனைவி, குழந்தையை ஜனார்த்தனன் சந்தித்த பிறகும், ராம்ஜியுடன் அடிக்கடி மொபைலில் சவுமிய பிரியா பேசி-யுள்ளார். இந்த ஆத்திரத்தில், 17 இரவு, ஜனார்த்தனன், அவரது கூட்டாளிகளுடன் சென்று, ராம்ஜி வீட்டில் தகராறு செய்துள்ளார். அப்போது அவரது வீட்டு கண்ணாடிகளை உடைத்து, பைக்கை அடித்து நொறுக்கினர். ராம்ஜி புகார்படி, அம்மாபேட்டை போலீசார் வழக்குபதிந்து, ஜனார்த்தனன், 28, கூட்டாளிகளான, அம்மாபேட்டை, நஞ்சம்பட்டி பாஸ்கர், 24, வ.உ.சி., நகர் ஆகாஷ், 19, காந்தி நகர் மதன்குமார், 20, மற்றும் ஒரு சிறுவன் என, 5 பேரை கைது செய்தனர்.