/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
யாவரும் கேளிர் தமிழ்மன்றத்தில் 5 நுால்கள் வெளியீட்டு விழா
/
யாவரும் கேளிர் தமிழ்மன்றத்தில் 5 நுால்கள் வெளியீட்டு விழா
யாவரும் கேளிர் தமிழ்மன்றத்தில் 5 நுால்கள் வெளியீட்டு விழா
யாவரும் கேளிர் தமிழ்மன்றத்தில் 5 நுால்கள் வெளியீட்டு விழா
ADDED : ஜூலை 29, 2025 01:09 AM
சேலம், சேலம் பொறியாளர் மாளிகையில், யாவரும் கேளிர் தமிழ் மன்றத்தின் ஓராண்டு நிறைவு விழா, ஐந்து நுால்கள் வெளியீட்டு விழா நடந்தது.
முதல் அமர்வுக்கு கவிஞர் பெரியசாமி வரவேற்றார். மன்ற தலைவர் கவிஞர் சுப்ரமணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பெரியார் பல்கலை துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் பேராசிரியர் சுப்பிரமணி தலைமை வகித்தார்.
தேசிய சமூக இலக்கிய பேரவை மாநில தலைவர் தாரை.குமரவேலு பேசுகையில்,'' படித்தவர், படிக்காதவர் மட்டுமல்ல உலகிலுள்ள எல்லா உயிரினங்களும் வாழுகின்ற ஊர்கள் நம்முடையதே; எல்லா உயிரினங்களும் நமக்கு அன்பால் உறவினர்களே என்ற மனித நேய கருத்தை சொன்னவர் கணியன் பூங்குன்றன் என்ற தமிழ் கவிஞர். அனைவரும் கல்வி கற்க வேண்டும். கல்வி அறிவு பெருக பெருக மனித நேயத்தோடும் பண்பாடும் வளர வேண்டும். அதுவே உண்மையான கல்வி வளர்ச்சி,''
என்றார்.
இரண்டாம் அமர்வில் ஐந்து புதிய நுால்கள் வெளியிடப்பட்டன. கவிஞர்கள் நாகப்பன், ஓமலுார் பாலு, மெய் சீனிவாசன் மாதுக்கண்ணன், பேராசிரியர் தமிழ்ப்பரிதி மாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.