/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருச்சூரில் 5 நாள் பயிற்சி 20 விவசாயிகள் பயணம்
/
திருச்சூரில் 5 நாள் பயிற்சி 20 விவசாயிகள் பயணம்
ADDED : செப் 10, 2025 02:21 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி வட்டார வேளாண் துறை, 'அட்மா' திட்டத்தில், 20 விவசாயிகள் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மன்னுத்தியில் உள்ள வேளாண் பல்கலைக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். பனமரத்துப்பட்டி அட்மா தொழில்நுட்ப மேலாளர் சுமித்ராவும் உடன் சென்றார்.
முன்னதாக, அட்மா குழு தலைவர் சந்திரசேகரன், வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத், வழி அனுப்பினர். அங்கு பால் உற்பத்தி, பாலில் மதிப்பூட்டிய உணவு பொருட்கள் தயாரித்தல் குறித்து, 5 நாட்கள் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. பட்டறிவு பயணமாக, கால்நடை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண் பல்கலை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்கின்றனர்.