ADDED : ஆக 28, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம்
ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கடந்த 2023ல் செப்.,7 ல் கன்னியாகுமரி
செல்ல காத்திருந்த ரயிலை மறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக சேலத்தை சேர்ந்த
கனகராஜ், 51, சுந்தரம், 64, கண்ணதாசன், 40, கார்த்திக், 33,
சந்தோஷ்குமார், 31, ஆகியோர் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கு
பதிவு செய்தனர்.இது தொடர்பான விசாரணை, சேலம் முதலாவது
ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு
விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று மாஜிஸ்திரேட் திருமால் தீர்ப்பு
கூறினார். அதில், ரயிலை மறித்து போராட்டம் நடத்திய கனகராஜ் உள்ளிட்ட 5
பேருக்கு தலா 4,500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
