ADDED : நவ 01, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெறிநாய் கடித்து
5 ஆடுகள் பலி
இடைப்பாடி, நவ. 1-
இடைப்பாடி அருகே செட்டிப்பட்டியை சேர்ந்த, விவசாயி குமார், 38. இவர் வளர்க்கும் ஆடுகளை, நேற்று முன்தினம் மாலை வீடு முன்புறம் கட்டி வைத்திருந்தார். நேற்று அதிகாலை பார்த்தபோது, வெறிநாய்கள் கடித்து, 5 ஆடுகள் பலியாகி கிடந்தன. இதனால் நாய்களை கட்டுப்படுத்த, விவசாயிகள் வலியுறுத்தினர்.