/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கலெக்டர் கார் முன் தீக்குளிக்க முயன்ற 5 பேர் கைது
/
கலெக்டர் கார் முன் தீக்குளிக்க முயன்ற 5 பேர் கைது
ADDED : மே 22, 2025 01:30 AM
ஆத்துார், ஆத்துார், ராமநாயக்கன்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், வரும், 26 முதல், 29 வரை தேர் திருவிழா நடக்கவுள்ளது. இதில் சிலரை ஒதுக்கி வைத்து திருவிழா நடத்துவதாக, நேற்று ஆத்துார் வந்த, கலெக்டர் பிருந்தாதேவியிடம், ஒரு தரப்பினர் புகார் மனு அளித்தனர்.
அப்போது குப்பமுத்து மனைவி வசந்தா, 40, அவரது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவர் உள்ளிட்டோரை, ஆத்துார் டவுன் போலீசார், ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர். பின், 17 பேர் மீது, 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர்.
இதில், வி.சி., கட்சியின், ஒன்றிய முன்னாள் செயலர் குப்பமுத்து, 46, அவரது மனைவி வசந்தா, 40, கனகசபை, 47, அவரது மனைவி சாந்தி, 38, சுரேஷ் மனைவி சங்கீதா, 38, ஆகியோரை நேற்று கைது செய்தனர். சுந்தரம் உள்பட, 12 பேரை தேடுகின்றனர். குப்பமுத்து மீது கொலை மிரட்டல், அடிதடி உள்பட, 65 வழக்குகள் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.