/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருமணத்தை தடுக்க 5 பேர் முயற்சி கலெக்டர் ஆபீஸ் முன் விஷம் குடித்த பெண்
/
திருமணத்தை தடுக்க 5 பேர் முயற்சி கலெக்டர் ஆபீஸ் முன் விஷம் குடித்த பெண்
திருமணத்தை தடுக்க 5 பேர் முயற்சி கலெக்டர் ஆபீஸ் முன் விஷம் குடித்த பெண்
திருமணத்தை தடுக்க 5 பேர் முயற்சி கலெக்டர் ஆபீஸ் முன் விஷம் குடித்த பெண்
ADDED : நவ 04, 2024 05:18 AM
சேலம்: இடைப்பாடி, சாமியார்பாளையத்தை சேர்ந்த ஜோசப் மகள் சகாயம் மிட்டில்லா, 29. பி.இ., பட்டதாரியான இவர், நேற்று காலை, 11:30 மணிக்கு சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார். உடனே குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த போலீசார் விசாரித்தபோது அவர் கூறியதாவது:
என் நிச்சயதார்த்தம், 2 மாதங்களுக்கு முன் நடந்தது. அப்போது கத்தேரியை சேர்ந்த 5 பேர், என் தாய், போதை பொருள் விற்பதாக சங்ககிரி போலீசில் புகார் அளித்தனர். விசாரணைக்கு பின் புகாரில் உண்மை இல்லை என, தாயை விடுவித்தனர். வரும், 8ல் என் திருமணம் நடக்க உள்ள நிலையில், அந்த, 5 பேரும் சேர்ந்து திருமணத்தை தடுக்க திட்டமிட்டு, மார்த்தாரூபி என்பவரை, என் தாய் தாக்கியதாக, மீண்டும் பொய் புகார் கொடுத்துள்ளனர். இதில் விசாரணைக்கு ஆஜராக, போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது, எனக்கு மட்டுமின்றி குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.இரு ஆண்டுகளாகவே அவர்கள் எங்களுக்கு எதிராக செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. அந்த விரக்தியில் தற்கொலைக்கு முயன்றேன். இதுதொடர்பாக கலெக்டர், எஸ்.பி., விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், '108' அவசரகால ஆம்புலன்ஸ் உதவியுடன் அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.