/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சகோதரர்களை தாக்கிய 5 பேர் கைது எஸ்.ஐ.,யை தள்ளிவிட்டதால் விசாரணை
/
சகோதரர்களை தாக்கிய 5 பேர் கைது எஸ்.ஐ.,யை தள்ளிவிட்டதால் விசாரணை
சகோதரர்களை தாக்கிய 5 பேர் கைது எஸ்.ஐ.,யை தள்ளிவிட்டதால் விசாரணை
சகோதரர்களை தாக்கிய 5 பேர் கைது எஸ்.ஐ.,யை தள்ளிவிட்டதால் விசாரணை
ADDED : நவ 03, 2024 01:26 AM
கெங்கவல்லி, நவ. 3-
சகோதரர்களை தாக்கிய புகாரில், 5 பேரை கைது செய்த போலீசார், விசாரிக்க சென்ற, எஸ்.ஐ.,யை தள்ளிவிட்டு தாக்க முயன்றது தொடர்பாக தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி, வடக்கு காட்டை சேர்ந்த, 18 வயதுடையவர், பெரம்பலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., படிக்கிறார். இவர் கபடி பயிற்சி அளிக்கிறார்.
இவரிடம் பயிற்சி தொடர்பாக, கடந்த மாதம், கெங்கவல்லி,
அம்பேத்கர் நகரை சேர்ந்த சிலர் தகராறு செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, அம்பேத்கர் நகரை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் மீண்டும் தகராறு செய்து, மாணவரை தாக்கினர்.
அதை தட்டிக்கேட்ட, மாணவரின் சகோதரரையும் தாக்கினர். இதை அறிந்து கெங்கவல்லி எஸ்.ஐ., கணேஷ்குமார் உள்ளிட்ட போலீசார், அங்கு சென்று தகராறு செய்தவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது, அந்த கும்பல், எஸ்.ஐ.,யை தள்ளிவிட்டு தாக்க முயன்றனர்.
இதில் காயம் அடைந்த மாணவர், அவரது சகோதரர், கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனை முன் இருதரப்பினரும் குவிந்ததால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இருதரப்பினர் தகராறு, எஸ்.ஐ.,யை தாக்க முயன்றது குறித்து, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் போலீசார் விசாரித்தனர். மாணவர் புகார்படி, 20க்கும் மேற்பட்டோர் மீது, கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்தனர்.
அதில் பிரேம்குமார், 34, மாயக்கண்ணன், 29, ரவிவர்மா, 23, முருகன், 26, ராகேஷ், 25, ஆகியோரை கைது செய்து மற்றவர்களை தேடுகின்றனர்.
அதேபோல் அரசு பணியை தடுத்து தகராறு செய்தது தொடர்பாக, எஸ்.ஐ., கணேஷ்குமார் அளித்த புகார் குறித்தும் போலீசார்
விசாரித்து வருகின்றனர்.