தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/5 பவுன் சங்கிலி பறித்தவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

5 பவுன் சங்கிலி பறித்தவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

5 பவுன் சங்கிலி பறித்தவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'


ADDED : நவ 06, 2026 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2026 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே மூலப்பாதையை சேர்ந்த, சக்திவேல் மனைவி ரேவதி, 40. அதே பகுதியில், கொங்கணாபுரம் - ஓமலுார் நெடுஞ்சாலையோரம் வசிக்கிறார். கடந்த ஜூன், 29 இரவு, வீட்டின் முன்புறம் அமர்ந்திருந்தார்.

அப்போது ஒருவர், ரேவதி அணிந்திருந்த, 5.5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு, 100 மீ.,ல் பைக்கில் தயாராக இருந்த மற்றொருவருடன் தப்பினார். கொங்கணாபுரம் போலீசார் விசாரணையில் இடைப்பாடி, வேம்பனேரியை சேர்ந்த வெங்கடேஷ், 30, அவரது தம்பி அஜித்குமார், 29, என தெரிந்து, கடந்த மாதம் 10ல் கைது செய்தனர். அவர்களிடம், 5.5 பவுன் சங்கிலியை மீட்டனர்.இந்நிலையில் அஜித்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., குத்தாலிங்கம் பரிந்துரைத்தார். அதை ஏற்று, சேலம் கலெக்டர் இளம்பகவத் நேற்று உத்தரவிட்டார். இதனால் அஜித்குமார், ஓராண்டுக்கு சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us