ADDED : ஏப் 17, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம், அம்மாபேட்டை, செல்வா நகரை சேர்ந்தவர் அலமேலு, 59. காரிப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். நேற்று மாலை பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியே, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அலமேலு அணிந்திருந்த, 5 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். இதுதொடர்பான புகார்படி, வீராணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.