/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டில் இருந்த மூதாட்டியிடம் நுாதனமாக 5 பவுன் திருட்டு
/
வீட்டில் இருந்த மூதாட்டியிடம் நுாதனமாக 5 பவுன் திருட்டு
வீட்டில் இருந்த மூதாட்டியிடம் நுாதனமாக 5 பவுன் திருட்டு
வீட்டில் இருந்த மூதாட்டியிடம் நுாதனமாக 5 பவுன் திருட்டு
ADDED : ஆக 02, 2025 01:08 AM
தாரமங்கலம், தாரமங்கலம், சக்தி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள், 89. இவர் நேற்று, தாரமங்கலம் போலீசில் அளித்த புகார் மனு:
என் மூத்த மகள் பெரியநாயகி, நேற்று முன்தினம் அருகே கோவிலுக்கு சென்றபோது, 40 வயது மதிக்கத்தக்க பெண், வீட்டுக்கு வந்தார். தொடர்ந்து என்னிடம், 'காஸ் மானியம் வந்துள்ளதால் போட்டோ எடுக்க வேண்டும். நீங்கள் அணிந்துள்ள தங்க சங்கிலியை கழற்றுங்கள்' என்றார்.
நானும், 2, 3 பவுன் கொண்ட, இரு சங்கிலிகளை கழற்றி, அங்கிருந்த மர பீரோவில் வைத்தேன். பின் அப்பெண், 'எங்கள் அதிகாரி பக்கத்து தெருவில் உள்ளார்' என கூறி என்னை அழைத்து சென்று ஒரு வீட்டின் திண்ணையில் அமர வைத்து சென்றார். திரும்ப வரவில்லை. வீட்டுக்கு சென்று பீரோவில் பார்த்தபோது, இரு சங்கிலிகளையும் காணவில்லை. அந்த பெண் மீது சந்தேகம் உள்ளதால் விசாரித்து நகைகளை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
போலீசார் அருகே உள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.