/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் போலீசாக நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு
/
சேலத்தில் போலீசாக நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு
சேலத்தில் போலீசாக நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு
சேலத்தில் போலீசாக நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு
ADDED : டிச 15, 2024 03:20 AM
சேலம்: சேலம், கருங்கல்பட்டியை சேர்ந்தவர் அலமேலு, 80; இவருக்கு சொந்தமான தோட்டம், தீவட்டிப்பட்டியில் உள்ளது. நேற்று காலை தோட்டத்துக்கு சென்று விட்டு, திருச்சி சாலையில், பிரபாத் சிக்னல் அருகே நடந்து சென்றார்.
அப்போது பைக்கில் வந்த இருவர், போலீஸ் என, அலமேலு-விடம் அறிமுகப்படுத்தி கொண்டனர். மேலும் 'திருடர்கள் தொல்லை இருப்பதால், நீங்கள் இவ்வளவு நகையை அணிந்து செல்லக்கூடாது. கழற்றி பர்சில் வைத்து கொள்ளுங்கள்' என கூறினர். அதை நம்பிய அலமேலு, 5 பவுன் நகையை கழற்றி பர்சில் வைத்தபோது, மர்ம நபர்கள் பிடுங்கி கொண்டு அதிவே-கத்தில் சென்றுவிட்டனர். அவர் புகார்படி செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.