ADDED : டிச 22, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
50 பாட்டில் பறிமுதல்
ஆத்துார், டிச. 22-
ஆத்துார் டவுன் போலீசார் நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுப்பேட்டை, புதுகாலனியை சேர்ந்த நாகராஜ், 30, என்பவர், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர். அதேபோல் முல்லைவாடி மயான பகுதியில், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற, முல்லைவாடி பிரபு, 41, என்பவரை கைது செய்தனர். இருவரிடமும், 30 மதுபாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கெங்கவல்லி போலீசார், கடம்பூரில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்ற குமரேசன், 36, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 20 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.