/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஸ்கள் நேருக்கு நேர் மோதல் உயிர் தப்பிய 50 பயணியர்
/
பஸ்கள் நேருக்கு நேர் மோதல் உயிர் தப்பிய 50 பயணியர்
பஸ்கள் நேருக்கு நேர் மோதல் உயிர் தப்பிய 50 பயணியர்
பஸ்கள் நேருக்கு நேர் மோதல் உயிர் தப்பிய 50 பயணியர்
ADDED : செப் 03, 2025 11:55 PM
காரிப்பட்டி:இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 50 பயணியர் உயிர் தப்பினர்.
சேலத்தில் இருந்து ஆத்துாருக்கு, 50 பயணியருடன் தனியார் பஸ், சென்று கொண்டிருந்தது. புத்திரகவுண்டன்பாளையத்தை சேர்ந்த செந்தமிழன், 30, ஓட்டினார்.
காலை, 10:30 மணிக்கு, மின்னாம்பள்ளி சந்தை அருகே, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த மாது, 50, என்பவர், ஆத்துார் நோக்கி சர்வீஸ் சாலையில் ஓட்டி வந்த, தனியார் பொறியியல் கல்லுாரி பஸ், தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது.
அப்போது தனியார் பஸ், கல்லுாரி பஸ் மீது மோதியது. இதில் தனியார் பஸ்சின் முன் பகுதி கண்ணாடிகள் சேதமாகின.
அதிர்ஷ்டவசமாக அந்த பஸ்சில் பயணித்த, 50க்கும் மேற்பட்ட பயணியர் உயிர் தப்பினர். காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.