/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., ஏற்பாட்டில் 50 பேர் ரத்த தானம்
/
தி.மு.க., ஏற்பாட்டில் 50 பேர் ரத்த தானம்
ADDED : டிச 02, 2024 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, தாரமங்கலம் நகர தி.மு.க., இளைஞரணி சார்பில், ரத்த தான முகாம், அதே பகுதியில் நேற்று நடந்தது.
சேலம் அரசு மருத்துவமனை இணைந்து நடந்திய முகாமை, சேலம் எம்.பி., செல்வகணபதி துவக்கி வைத்தார். இதில் பொதுமக்கள், இளைஞர் அணியினர் என, 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். அவர்க-ளுக்கு எம்.பி., பழங்கள், சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் நகராட்சி தலைவர் குணசேகரன், ஒன்றிய செயலர் பாலகிருஷ்ணன், மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, துணை செயலர் சம்பத்குமார், ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், கவுன்சி-லர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.