/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
50 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து நெகிழ்ச்சி
/
50 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து நெகிழ்ச்சி
ADDED : டிச 09, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: நங்கவள்ளி அருகே வனவாசி அரசு உயர்நிலைப் பள்ளியில், 1974 - -75ம் ஆண்டில், 10ம் வகுப்பு படித்தவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அதில், முன்னாள் மாணவ, மாணவியர், 100க்கும் மேற்பட்டோர், மேள, தாளம் முழுங்க, ஊர்வலமாக தேசிய கொடியை ஏந்தி, அருகே உள்ள மண்டபத்துக்கு சென்றனர்.
அங்கு பாடம் கற்பித்த, ஓய்வு பெற்ற ஆசிரியர்களான கண்ணன், பாலசுப்ரமணியம், சுந்தர்ராஜ், நெல்லையப்பர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள், நினைவுகளை பகிர்ந்து கொண்டு குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். டவுன் பஞ்சாயத்து தலைவர்களான, நங்கவள்ளி மாணிக்கவேல், வனவாசி ஞானசேகரன் பங்கேற்றனர்.