/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புலியாத்தம்மன் கோவில் தெவத்திருவிழா 500 ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன்

ADDED : ஜூன் 07, 2025 01:15 AM
இடைப்பாடி, :இடைப்பாடியில், புலியாத்தம்மன் கோவில் தெவத்திருவிழா நேற்று நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
இடைப்பாடி, கவுண்டம்பட்டியில் பிரசித்தி பெற்ற புலியாத்தம்மன் கோவில் உள்ளது. இடைப்பாடியில் உள்ள கவுண்டம்பட்டி, வெள்ளாண்டிவலசு, தாவாந்தெரு, நைனாம்பட்டி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வழிபடும் குலதெய்வ கோவிலாக உள்ளது. இங்கு தெவத்திருவிழா கடந்த மாதம், 23ல், தொடங்கியது. கடந்த, 15 நாட்களாக தினமும் பூஜைகள் நடந்து வந்தன.
நேற்று முன்தினம், 300க்கும் மேற்பட்ட பெண்கள் பூஜை கூடைகளுடன் இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்தனர். நேற்று காலை பன்றி, ஆடு, கோழி ஆகியவை பலியிடப்பட்டு முப்பூஜை செய்யப்பட்டது. பின்னர் பொங்கல் வைத்து, 500க்கும் மேற்பட்ட ஆடுகள், 500க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிட்டு குலதெய்வத்திற்கு நேர்த்திக்கடன்
செலுத்தினர்.