ADDED : செப் 22, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி: இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. வீரபாண்டி அட்மா குழு தலைவர் வெண்ணிலா தொடங்கி வைத்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் தலைமையில் குழுவினர், கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். கர்ப்பிணியருக்கு மருத்துவ பெட்டகங்கள் வழங்கப்பட்டன. இதன்மூலம், 500க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.