/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை முதல் 13 வரை 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
நாளை முதல் 13 வரை 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : மே 08, 2025 01:21 AM
சேலம், சேலம் கோட்ட அரசு போக்குவரத்து நிர்வாக இயக்குனர் ஜோசப்டயஸ் அறிக்கை:
சித்திரை பவுர்ணமி, இரண்டாம் சனியை முன்னிட்டு, வரும், 9(நாளை) முதல் 13 வரை, சேலம் கோட்டத்தில், 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலம் புறநகர், பெங்ளூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து, பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்து முன்பதிவு மையம், www.tnstc.in என்ற இணையதளம் வழியே முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
குறிப்பாக சித்திரை பவுர்ணமிக்கு, திருவண்ணாமலை கிரிவலம் செல்ல வசதியாக வரும், 10 முதல், 12 வரை, சேலம், ஆத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து பயணியர் தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 10 காலை, 6:00 முதல், 12 மாலை, 5:00 மணி வரை, ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் வீதம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம், தர்மபுரி, ஓசூர் பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து திருவண்ணாலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பயணியர் நெரிசலை தவிர்த்து, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.