sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஜன., 4ல் அ.தி.மு.க., கூட்டம் 50,000 பேர் பங்கேற்க ஏற்பாடு

/

ஜன., 4ல் அ.தி.மு.க., கூட்டம் 50,000 பேர் பங்கேற்க ஏற்பாடு

ஜன., 4ல் அ.தி.மு.க., கூட்டம் 50,000 பேர் பங்கேற்க ஏற்பாடு

ஜன., 4ல் அ.தி.மு.க., கூட்டம் 50,000 பேர் பங்கேற்க ஏற்பாடு


ADDED : டிச 30, 2025 01:27 AM

Google News

ADDED : டிச 30, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்.,சின், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயண பொதுக்-கூட்டம், சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டசபை தொகுதி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், வரும் ஜன., 4 மாலை, 4:00 மணிக்கு நடக்க உள்ளது. அதற்கு மேடை, பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது. அப்பணியை நேற்று, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பார்வையிட்டார்.

தொடர்ந்து கூட்ட ஏற்பாடு குறித்து, அண்ணா தொழிற்சங்கம், மாணவர் அணி, வக்கீல் பிரிவு, தகவல் தொழில்நுட்பம் உள்-ளிட்ட அணி நிர்வாகி களுடன், தனித்தனியே ஆலோசித்து அறி-வுரை வழங்கினார்.

எம்.எல்.ஏ.,க்கள் வீரபாண்டி ராஜமுத்து, ஆத்துார் ஜெயசங்கரன், ஒன்றிய செயலர்கள், பனமரத்துப்பட்டி கிழக்கு பாலச்சந்திரன், மேற்கு ஜெகநாதன், வீரபாண்டி மேற்கு வருதராஜ், கிழக்கு வெங்-கடேசன், சேலம் செல்வ பிரகாஷ், மாவட்ட அம்மா பேரவை துணை செயலர் சித்துராஜ், தகவல் தொழில்நுட்ப செயலர் ஜெய-காந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் வீரபாண்டி தொகுதியில் இருந்து மட்டும், 50,000 பேர் பங்கேற்பதாகவும், அவர்களுக்கு தேவையான இருக்கை, குடிநீர், சிற்றுண்டி உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுவதாகவும் கட்சியினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us