sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'பதவி வெறி கண்களை மறைத்தால் தகப்பன் கூட எதிரியாகத்தான் தெரிவர்'

/

'பதவி வெறி கண்களை மறைத்தால் தகப்பன் கூட எதிரியாகத்தான் தெரிவர்'

'பதவி வெறி கண்களை மறைத்தால் தகப்பன் கூட எதிரியாகத்தான் தெரிவர்'

'பதவி வெறி கண்களை மறைத்தால் தகப்பன் கூட எதிரியாகத்தான் தெரிவர்'


ADDED : டிச 30, 2025 01:27 AM

Google News

ADDED : டிச 30, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ''நீங்கள் அமைச்சர் ஆகலாம். என் தம்பி, கட்சி பதவிக்கு வரக்கூ-டாதா?'' என, சேலத்தில் நடந்த பா.ம.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் சுகுந்தன் கேள்வி எழுப்பினார்.

முகுந்தனுக்கு பதவி வழங்கியதற்கு, ராமதாஸை மேடையில் வைத்துக்கொண்டு, 'அவனுக்கு அனுபவம் போதாது' என்றார் அன்புமணி. கால்மேல் கால் போட்டுக்கொண்டு, மைக்கை துாக்கி போடுவது எவ்வளவு கேவலம் தெரியுமா?

கடந்த, 2004ல் அன்புமணி கட்சி யில் சேர்ந்தபோது, இளைஞர் அணி தலைவர், தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி., மத்திய அமைச்சர் என எவ்வளவு பதவி. நீங்கள் அமைச்சர் ஆகலாம். என் தம்பி, கட்சி பதவிக்கு வரக்கூடாதா? உங்களுக்கு காதில் வந்தால் ரத்தம். எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

ஷாஜகான், தாஜ்மஹாலை கட்டியவர். அவர், அவரது தந்தை அவுரங்கசீப்பை, 8 ஆண்டு ஜெயிலில் போட்டு அடைத்தார். எதற்கு தெரியுமா பதவி வெறி. அது கண்களை மறைத்தால் பெற்ற தகப்பன் கூட எதிரியாகத்தான் தெரிவர். அவமானம் செய்ய கை கூசாது.ராமதாஸ் ஹீரோ. அவர் எந்த பதவியிலும் அமரவில்லை. அவ-ரது மகனை பதவியில் வைத்து அழகு பார்த்தார். 2026ல் யார் ஹீரோ, யார் ஜீரோ என்று தெரியும்.

இவ்வாறு பேசினார்.






      Dinamalar
      Follow us