/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
11 நாளில் காப்பீடு அட்டை கேட்டு 5,704 குடும்பத்தினர் விண்ணப்பம்
/
11 நாளில் காப்பீடு அட்டை கேட்டு 5,704 குடும்பத்தினர் விண்ணப்பம்
11 நாளில் காப்பீடு அட்டை கேட்டு 5,704 குடும்பத்தினர் விண்ணப்பம்
11 நாளில் காப்பீடு அட்டை கேட்டு 5,704 குடும்பத்தினர் விண்ணப்பம்
ADDED : செப் 23, 2024 03:17 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில் பழநி ஆண்டவர் கோவில் மண்டபம், ஒண்டிக்கடை சமுதாய கூடம் ஆகிய இடங்களில் கலைஞர் மருத்-துவ காப்பீடு திட்ட அட்டை புதிதாக பதிவு செய்யும் முகாம் நேற்று நடந்தது. தி.மு.க.,வின் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடந்த, 13 முதல், 21 வரை, 11 இடங்களில் முகாம் நடத்தப்-பட்டது. அதில், 5,704 குடும்பத்தினர் விண்ணப்பித்தனர்.
புதிதாக, 1,723 குடும்பத்துக்கு காப்பீடு அட்டை பதிவு செய்-யப்பட்டது. 3,981 குடும்பத்தினருக்கு அட்டை புதுப்பித்து வழங்-கப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக பனமரத்துப்பட்டியில் நடந்தது. செப்., 23ல்(இன்று) சந்தியூர், 24ல் சந்தியூர் ஆட்டை-யாம்பட்டி, 25ல் அம்மாபாளையம், மூக்குத்திப்பாளையம், 26ல் ஏர்வாடி வாணியம்பாடி, 27ல் மல்லுாரில், இரு இடங்களில் முகாம் நடக்கிறது. தொடர்ந்து வீரபாண்டி தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஊராட்சிகளிலும் தனித்தனியே முகாம் நடத்தி அனைத்து மக்களுக்கும் காப்பீடு அட்டை கிடைக்க நடவ-டிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் ஒன்றிய குழு துணைத்தலைவர் சங்கர், ஒன்றிய கமி-ஷனர் கார்த்திகேயன், பனமரத்துப்பட்டி தி.மு.க., நகர செயலர் ரவிக்குமார், டவுன் பஞ்சாயத்து தலைவர் பரமேஸ்வரி உள்-ளிட்டோர் பங்கேற்றனர்.