/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
6 மாதமாக குடிநீர் சப்ளை முற்றிலும் நிறுத்தம்ஒரு குடம் தண்ணீர் ரூ.3க்கு வாங்கும் அவலம்

ADDED : மார் 25, 2025 01:11 AM
6 மாதமாக குடிநீர் சப்ளை முற்றிலும் நிறுத்தம்ஒரு குடம் தண்ணீர் ரூ.3க்கு வாங்கும் அவலம்
நாமக்கல்:'ஆறு மாதமாக குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டதால், அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இப்பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ராசிபுரம், அணைப்பாளையத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், அணைப்பாளையம் கிராம பஞ்சாயத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறோம். இங்கு, 208 குடும்பங்கள் உள்ளன. மூன்று ஆண்டுகளாக வசித்து வரும் எங்களுக்கு, அணைப்பாளையம் கிராம பஞ்சாயத்து மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கப்பட்டு, தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. காவிரி குடிநீரும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த, ஆறு மாதமாக குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அப்படியே தண்ணீர் வந்தாலும், ஒருகுடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. ஒரு குடும்பத்தில், நான்கு, ஐந்து பேர் உள்ளதால், ஒரு குடம் தண்ணீர் உடனடியாக தீர்ந்து விடுகிறது.
இது சம்பந்தமாக, பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்துவிட்டோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேரில் சென்று காரணம் கேட்டால், 'வரும்போது தருகிறோம்' என அசட்டையாக பதிலளிக்கின்றனர். கோடைகாலம் என்பதால், தண்ணீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையால், பெண்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். வேறு வழியின்றி, ஏழு கி.மீ., துாரமுள்ள ராசிபுரத்திற்கு சென்று, ஒரு குடம் தண்ணீர், மூன்று ரூபாய் கொடுத்து வாங்கி வந்து பயன்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள எங்களுக்கு, போர்கால அடிப்படையில், தேவையான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், வீடுகளை காலி செய்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.