/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர் உட்-பட 6 பேர் கைது
/
காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர் உட்-பட 6 பேர் கைது
காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர் உட்-பட 6 பேர் கைது
காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர் உட்-பட 6 பேர் கைது
ADDED : ஜன 25, 2025 02:35 AM
இடைப்பாடி:இடைப்பாடி அருகே, ஏழு மாதத்திற்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட, கர்ப்பிணி பெண்ணை கடத்திய பெற்றோர் உட்-பட, ஆறு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே செட்டிமாங்குறிச்சி கிராமம், சின்னதாண்டவனுாரை சேர்ந்தவர் ஏழுமலை மகன் தனிஷ்கண்டன், 25. இவர், ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவ-னத்தில் பணிபுரிந்த போது, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சின்னம்பள்ளியை சேர்ந்த குமார் செல்வம் மகள் ரோஷினியை, 22, காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு, வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்திற்கு ரோஷினி குடும்பத்-தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை, 4ல், இருவரும் திரு-மணம் செய்து கொண்டனர். பின், ரோஷினியின் குடும்பத்தா-ரிடம் இருந்து பாதுகாப்பு கோரி, இடைப்பாடி போலீசில் அப்-போது தஞ்சமடைந்தனர். விசாரணை செய்த போலீசார், ரோஷினி குடும்பத்தாரை அழைத்துள்ளனர். அவர்கள் வர மறுத்-ததால், ரோஷினியை தனிஷ்கண்டனுடன் அனுப்பி வைத்தனர்.
கடந்த ஏழு மாதங்களாக தனிஷ்கண்டன், ரோஷினி ஆகியோர் சின்னதாண்டவனுாரில் குடியிருந்து வருகின்றனர். தற்போது ரோஷிணி, ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், 3:30 மணிக்கு ரோஷினியின் பெற்றோர் அமைத்த கூலிப்படையினர், காரில் கத்தி, அரிவாள், கட்டைகளுடன் தனிஷ்கண்டன் வீட்டுக்கு சென்று அவரை மிரட்டி, ரோஷினியை காரில் கடத்தியுள்ளனர்.
தனிஷ்கண்டன் கொடுத்த புகார்படி, இடைப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் வந்து சென்ற வழித்தடங்களில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்து, பெண்ணின் வீடான தர்மபுரி மாவட்டம், சின்னம்பள்ளி பகுதிக்கு சென்ற இடைப்பாடி இன்ஸ்பெக்டர் பேபி, எஸ்.ஐ., ஸ்ரீராமன் உள்ளிட்ட போலீசார், அங்கிருந்து ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, சித்தோடு சென்று கர்ப்பிணி பெண் ரோஷினியை மீட்டனர்.
பெண்ணை கடத்த திட்டம் தீட்டியதாக தந்தை குமார் செல்வம், 50, பெரியப்பா லட்சுமணன், 53, தாய் சித்ரா, 40, அக்கா சவுமியா, 24, பதுங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் வெங்-கடாசலம், 49, பூசாரி கருப்பண்ணன், 60, ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய ஈகோ காரையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதே வழக்கில், இருவரை பிடித்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் கடத்தல் கும்பலையும் போலீசார் தேடி வருகின்றனர்.

