/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொடர் வழிப்பறி 6 பேருக்கு 'குண்டாஸ்'
/
தொடர் வழிப்பறி 6 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : டிச 06, 2025 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், சுக்கம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை, கடந்த, 15ல், 6 பேர் கட்டையால் தாக்கி, மொபைல் போனை பறித்துக்கொண்டு, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து வீராணம் போலீசார் விசாரித்து, அஸ்தம்பட்டி, பள்ளக்காட்டை சேர்ந்த மாதங்கி தாஸ், 26, சின்னகொல்லப்பட்டி மணிகண்டன், 24, கன்னங்குறிச்சி ராம்குமார், 27, சீனிவாசன், 28, விஷ்வா, 22, மன்னார்பாளையம் சரவணன், 28, ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது, ஏற்கனவே அடிதடி, வழிப்பறி வழக்குகள் இருப்-பது, விசாரணையில் தெரிந்தது.இதனால் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்த, 6 பேரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கமிஷனர் அனில்-குமார் கிரி, நேற்று உத்தரவிட்டார்.

