/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொள்முதல் மையத்தில் 6 மூட்டை நெல் திருட்டு
/
கொள்முதல் மையத்தில் 6 மூட்டை நெல் திருட்டு
ADDED : மே 11, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, கெங்கவல்லி, கொண்டையம்
பள்ளியை சேர்ந்த, விவசாயி செந்தில்குமார், 45. இவர், கடந்த ஏப்., 1ல், கூடமலை நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் விற்க பதிவு செய்திருந்தார். ஒரு வாரத்துக்கு முன், 98 மூட்டை நெல் கொண்டு வந்தார்.
நேற்று முன்தினம் மூட்டைகளை சரிபார்த்தபோது, 6 மூட்டைகள் குறைந்திருந்தன. இதுகுறித்து செந்தில்குமார் நேற்று அளித்த புகார்படி, கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.