sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

6 குழந்தை திருமணம்தடுத்து நிறுத்தம்

/

6 குழந்தை திருமணம்தடுத்து நிறுத்தம்

6 குழந்தை திருமணம்தடுத்து நிறுத்தம்

6 குழந்தை திருமணம்தடுத்து நிறுத்தம்


ADDED : டிச 14, 2024 01:12 AM

Google News

ADDED : டிச 14, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், டிச. 14-

பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கை குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதற்கு தலைமை வகித்து, கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:

பெண்கள், குழந்தைகளுக்கு உதவி சேவை மையம், கலெக்டர் அலுவலக அறை எண்: 120ல், 24 மணி நேரமும் செயல்படுகிறது. அந்த மையத்தின் புறத்தொடர்பு பணிகள், சேலம் புது பஸ் ஸ்டாண்டில் செயல்படுகிறது. தவிர, 1098 என்ற எண்ணில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.

கடந்த நவம்பர் வரை, உதவி மையத்துக்கு, 204 அழைப்பு, சந்திப்புகள் வரப்பெற்று அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், 85 அழைப்புகள் குழந்தைகள் நலக்குழு மூலம் விசாரித்து, மறுவாழ்வு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மீதி, 119 அழைப்புகளை உடனே தொடர்பு கொண்டு அலுவலர்கள் நேரில் சென்று, குழந்தைகளை சந்தித்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

குறிப்பாக குழந்தை திருமணம் தொடர்பாக, 27 புகார்கள் வரப்பெற்றன. அதன் மீது நடவடிக்கை எடுத்து 6 திருமணங்கள் தடுத்து நிறுத்தி, உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us