ADDED : செப் 04, 2025 01:42 AM
ஆத்துார், சேலம் மாவட்ட உரக்கண்காணிப்பு அலுவலர் குழுவை சேர்ந்த, வேளாண் உதவி இயக்குனர் கவுதம்(தரக்கட்டுப்பாடு) தலைமையில் வேளாண் உதவி இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள், நேற்று, ஆத்துார், தலைவாசல், வீரகனுார், கெங்கவல்லி, தம்மம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து அலுவலர்கள் கூறியதாவது:
ஆய்வில் இருப்பு வைத்து விற்காதது, 8 கடைகள்; இருப்பு மற்றும் விற்பனை தகவல் இல்லாதது, 7 கடைகள்; உர விற்பனைக்கு உரிய அங்கீகாரம் இல்லாத, 'ஓ' படிவம் - 5 கடைகள், உரம் என வகைப்படுத்தாத இருப்பு வைத்ததால் விற்பனை தடை விதித்தது, 3 கடைகள் என, உர விற்பனையில் விதிமீறல் கண்டறியப்பட்டது. மேலும் விதிமீறல் இருந்த, 6 கடைகளில் உரம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகளில், குறைகளை சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.