/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒழுங்கீன செயல்களை தடுக்க மாணவ பேரவைக்கு அறிவுறுத்தல்
/
ஒழுங்கீன செயல்களை தடுக்க மாணவ பேரவைக்கு அறிவுறுத்தல்
ஒழுங்கீன செயல்களை தடுக்க மாணவ பேரவைக்கு அறிவுறுத்தல்
ஒழுங்கீன செயல்களை தடுக்க மாணவ பேரவைக்கு அறிவுறுத்தல்
ADDED : செப் 04, 2025 01:41 AM
சேலம், சேலம் அரசு கலைக்கல்லுாரியில் நடப்பு கல்வியாண்டு மாணவ பேரவை தொடக்க விழா, நேற்று நடந்தது. அதில் கல்லுாரி முதல்வர் கலைச்செல்வி தலைமை வகித்து பேசுகையில், ''விடுமுறை நாட்களில் கல்லுாரியில் அத்துமீறி நுழையும் சமூக விரோதிகளால் பல ஒழுங்கீன செயல்கள் நடக்கின்றன. மாணவர் பேரவை குழு அமைப்பு, ஒழுங்கீன செயல்களை அறவே தடுக்க வேண்டும்,'' என்றார்.
புள்ளியியல் துறை தலைவர் கீதா, ஆங்கிலத்துறை இணை பேராசிரியர்கள் அன்பழகன், ரவிச்சந்திரன் பேசினர். பின் பொறுப்பேற்று கொண்ட பேரவை உறுப்பினர்கள், உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். தேர்வு கட்டுப்பாடு அலுவலர் பிரேமலதா, ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் உள்பட மாணவ, மாணவியர்
பங்கேற்றனர்.