/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மது விற்ற 6 பேர் கைது 1,754 பாட்டில் பறிமுதல்
/
மது விற்ற 6 பேர் கைது 1,754 பாட்டில் பறிமுதல்
ADDED : அக் 03, 2025 02:02 AM
சேலம், சேலம், கிச்சிப்பாளையம் பிரதான சாலை, பச்சப்பட்டியில், நேற்று மாநகர போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஒரு வீட்டில், அரசின் மதுபாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. விற்பனையில் ஈடுபட்ட, சாந்தா, 63, என்பவரை கைது செய்த போலீசார், 550 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் இரும்பாலையில் மது விற்ற, மாரமங்கலத்துப்பட்டி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரப்பன், 47, சின்ன பூசாரியூரை சேர்ந்த கண்ணன், 47, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
மேலும் அன்னதானப்பட்டியில் மது விற்ற துரைசாமி, 39, அமானி கொண்டலாம்பட்டி, காட்டூர் பிள்ளையார் நகர் ஆறுமுகம், 75, ஆகியோரை கைது செய்த போலீசார், 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ரூ.1.50 லட்சம்
மேச்சேரி போலீசார், நேற்று காலை, 8:30 மணிக்கு, சீராமணியூர், ஆட்டுசந்தை அருகே ஆய்வு செய்தனர். அப்போது சந்துக்கடையில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த, 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 264 பீர் பாட்டில்கள், 840 குவார்ட்டர் என, 1,104 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, பதுக்கி வைத்த வியாபாரி பழனிசாமி, 46, என்பவரை கைது செய்தனர்.