/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேனுடன் 611 கிலோ புகையிலை பறிமுதல் 17 வழக்குக்கு பின் மீண்டும் கடத்தியவர் சிக்கினார்

ADDED : ஜூன் 19, 2025 01:35 AM
சேலம், வேனுடன், 611 கிலோ புகையிலையை பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்த முயன்ற, 2 பேரை கைது செய்தனர். அதில் வேன் டிரைவர் மீது ஏற்கனவே புகையிலை தொடர்பாக, 17 வழக்குகள் உள்ள நிலையில், 10 ஆண்டாக தொடர்ந்து, கடத்தல் தொழிலில் ஈடுபட்டதும் தெரிந்தது.
சேலம், 4 ரோடு அருகே, செவ்வாய்ப்பேட்டை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மாருதி வேனை சோதனை செய்ததில், 450 கிலோ ஹான்ஸ் உள்பட, 611 கிலோவில் புகையிலை பொருட்கள் இருந்தன. அதன் மதிப்பு, 5.12 லட்ச ரூபாய். வேனில் இருந்தவர்களிடம் விசாரித்ததில், தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூர், ரங்கநாதன் தெருவை சேர்ந்த லிங்கராஜ், 58, இரும்பாலை அடுத்த வட்டமுத்தாம்பட்டி, காமராஜ் நகரை சேர்ந்த ஜக்குபார், 58, என தெரிந்தது.
இதில் லிங்கராஜ், டிரைவர், வேன் உரிமையாளர் என்பதும், அவர் பெங்களூருவில் மொத்தமாக புகையிலை வாங்கி வந்து, சேலம் மாவட்டத்தில் உள்ள கடைகளுக்கு விற்கும் தொழிலை, 10 ஆண்டுக்கு மேலாக மேற்கொண்டு வந்ததும் தெரிந்தது.
லிங்கராஜ் மீது, இதுதொடர்பாக ஏற்கனவே, 17 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், போலீசார் கெடுபிடிக்கு பயந்து, சேலம், மணியனுாரில் இருந்து, ஓராண்டுக்கு முன், கே.ஆர்.தோப்பூர் பகுதிக்கு குடியேறி, தொழிலை தொடர்ந்ததும் தெரிந்தது. வேனுடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.