/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புகையிலை விற்ற 642 கடைகளுக்கு 'சீல்'
/
புகையிலை விற்ற 642 கடைகளுக்கு 'சீல்'
ADDED : நவ 21, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புகையிலை விற்ற
642 கடைகளுக்கு 'சீல்'
சேலம், நவ. 21-
சேலம் மாவட்டத்தில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்கள், மாநகர போலீசாருடன் இணைந்து, கடந்த, 8 மாதங்களில், 1,000க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்ற, 642 கடைகளுக்கு, 'சீல்' வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மீறி விற்போருக்கு உரிமம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றனர்.