/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.6.50 லட்சம் மோசடி:பாதிக்கப்பட்ட பெண்தற்கொலை முயற்சி
/
ரூ.6.50 லட்சம் மோசடி:பாதிக்கப்பட்ட பெண்தற்கொலை முயற்சி
ரூ.6.50 லட்சம் மோசடி:பாதிக்கப்பட்ட பெண்தற்கொலை முயற்சி
ரூ.6.50 லட்சம் மோசடி:பாதிக்கப்பட்ட பெண்தற்கொலை முயற்சி
ADDED : மார் 23, 2025 01:03 AM
ரூ.6.50 லட்சம் மோசடி:பாதிக்கப்பட்ட பெண்தற்கொலை முயற்சி
சேலம்:சேலம், காசக்காரனுார், காட்டுவட்டத்தை சேர்ந்த பாலா மனைவி உஷா, 41. இவர், கடந்த, 20ல், மன அழுத்தத்துக்கான, 30 மாத்திரைகளை சாப்பிட்டு, தளவாய்பட்டி பகுதியில் சாலையில் மயங்கி விழுந்தார். மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இரும்பாலை போலீசார் விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: உறவினர் மூலம் உஷாவுக்கு சிலம்பு என்பவர் அறிமுகமானார். அவர், முதலீடு செய்ய பணம் கொடுத்ததால், இரு மடங்காக திருப்பி தருவதாக கூறியுள்ளார். அதை நம்பிய உஷா, 6.50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் சிலம்பு, பணம் தராமல் இழுத்தடித்து வந்தார். கடந்த, 20 அன்று, 50,000 ரூபாய் தருவதாக கூறி, தளவாய்பட்டி வரும்படி உஷாவை அழைத்துள்ளார். அவரும் சிலம்பு வீட்டுக்கு சென்றார். அங்கு உஷாவிடம், 'பணத்தை தர முடியாது' என கூறி, சிலம்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வேதனையில் உஷா, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சிலம்புவை தேடுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.