/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'தி.மு.க., ஆட்சியால் மக்களுக்கு ஏழரை சனி'
/
'தி.மு.க., ஆட்சியால் மக்களுக்கு ஏழரை சனி'
ADDED : ஏப் 17, 2024 02:26 AM
இடைப்பாடி:சேலம்
லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து
இடைப்பாடியில் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் அக்கட்சி
பொதுச்செயலர், இ.பி.எஸ்., பேசியதாவது:
தி.மு.க., வேட்பாளர்
செல்வகணபதி, அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்தார். தீயசக்தி
தி.மு.க.,வில் இணைந்து, அ.தி.மு.க.,வை எதிர்த்து நிற்கிறார். இந்த
கட்சிக்கு துரோகம் செய்கிறவர்கள், அரசியலில் காணாமல் போனதுதான்
வரலாறு.
தி.மு.க., 3 ஆண்டு ஆட்சியில், 3.50 லட்சம் கோடி கடன்
வாங்கியிருக்கிறார் ஸ்டாலின். வரி மேல் வரி போட்டு படாதபாடு
படுத்துகிறார். மின் கட்டணம், அரிசி, மளிகை சாமான் விலை
உயர்ந்திருக்கிறது. மக்களிடம் போனில் நலமா என ஸ்டாலின் கேட்கிறார்.
ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தது முதல், மக்களுக்கு ஏழரை சனி
பிடித்துவிட்டது. ஸ்டாலின் குடும்பம்தான் நலமாக இருக்கிறது. தமிழக
மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அமைச்சர்கள்
இத்தனை பேர் வருகிறார்கள். ஒவ்வொரு அமைச்சர்களும் ஒவ்வொரு
திட்டங்களை கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே. ஓட்டுக்கு மட்டும்
வருகிறார்கள். அதனால்தான் தேசிய கட்சிகளோடு கூட்டணி இல்லை என்ற
நிலையை எடுத்தோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் நகர செயலர்
முருகன், கொங்கணாபுரம் ஒன்றிய குழு தலைவர் மணி, ஒன்றிய செயலர்கள்
மாதேஸ், மாதேஸ்வரன், ராஜேந்திரன், கோரணம்பட்டி ஊராட்சி தலைவர்
ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

