/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அலைபேசியில் பேசிய டிரைவர் பஸ் கவிழ்ந்து 7 பேர் படுகாயம்
/
அலைபேசியில் பேசிய டிரைவர் பஸ் கவிழ்ந்து 7 பேர் படுகாயம்
அலைபேசியில் பேசிய டிரைவர் பஸ் கவிழ்ந்து 7 பேர் படுகாயம்
அலைபேசியில் பேசிய டிரைவர் பஸ் கவிழ்ந்து 7 பேர் படுகாயம்
ADDED : பிப் 13, 2025 02:46 AM

ஆத்துார்:மலை கிராமத்துக்கு சென்ற டவுன் பஸ், 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில், டிரைவர் உட்பட, 7 பேர் படுகாயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று காலை, 9:00 மணிக்கு, அரசு டவுன் பஸ், பைத்துார் வழியாக கல்லுக்கட்டு மலை கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தது.
கெங்கவல்லி, ஆணையாம்பட்டியை சேர்ந்த, டிரைவர் செல்வராஜ், 55, ஓட்டினார்.
பெரியகருப்பு கோவில் அருகே, மேடான சாலையில் ஏறியபோது, எதிரே தனியார் பள்ளி வாகனம் வந்தது. அப்போது, பஸ் நிற்காமல் பின்னோக்கி வந்தது.
தற்காலிக கண்டக்டர் ராமலிங்கம், 25, குதித்து, சக்கரம் முன் பெரிய கல்லை வைத்தார். அந்த கல்லை உடைத்தபடி, சாலையோரம், 15 அடி பள்ளத்தில் உள்ள கலியபெருமாள் தோட்டத்தில், பஸ் தலைகுப்புற கவிழ்ந்தது.
சாலையோரம் தடுப்பு இல்லாததால், கவிழ்ந்த வேகத்தில் பஸ் அப்பளம் போல நொறுங்கியது. பஸ்சில் சிக்கியவர்களை அப்பகுதி மக்கள் மீட்டனர்.
இதில், கல்லுக்கட்டு அரசு தொடக்கப்பள்ளி 2ம் வகுப்பு மாணவி காமேஸ்வரி, 5ம் வகுப்பு மாணவி கவிப்பிரியா, பஸ் டிரைவர் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்கள், ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், 'பஸ்சில் பிரேக் பழுது இல்லை. செல்வராஜ், விபத்துக்கு முன், மொபைல் போனில் பேசியபடி சென்றது தெரிந்தது. அவரை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளோம்' என்றனர்.

