/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஈரோடு கிழக்கில் ௨வது நாளில் 7 வேட்பு மனு தாக்கல்
/
ஈரோடு கிழக்கில் ௨வது நாளில் 7 வேட்பு மனு தாக்கல்
ADDED : ஜன 14, 2025 02:56 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் கடந்த, 10ல் துவங்கியது. அன்றைய தினம் தேர்தல் மன்னன் பத்-மராஜன், நுார்முகம்மது, கரூர் விநாயகம் என மூன்று பேர் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று, சமூக ஆர்வலர்க-ளான சேலம், தாதகாபட்டி ராஜசேகர், 67; ஈரோடு 46 புதுார் கோபாலகிருஷ்ணன், 33, சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தனர். இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம்
சோழந்துார் கஜினி முகம்-மது என்ற பானைமணி, 77, என்பவர், மஞ்சள் குலை, இலையை பானையில் வைத்து, தலையில் சுமந்தபடி வந்து மனுத்தாக்கல் செய்தார். இவர், 23வது முறை மனுத்தாக்கல் செய்வதாக தெரி-வித்தார்.தர்மபுரியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஆனந்த், 40; ஈரோடு, மரப்பாலம், வாசனை திரவிய வியாபாரி முகம்மது கைபில், 51; சென்னையில் பேப்பர் வியாபாரம் செய்யும் இசக்கி-முத்து, 50, என ஆறு பேர்
சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்-தனர். அதேசமயம் முதல் நாள் மனுத்தாக்கல் செய்த நுார்முகம்-மது, கூடுதலாக ஒரு வேட்பு மனு தாக்கல் செய்தார். இதைய-டுத்து மனுத்தாக்கல் எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்தது. இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் கூறுகையில், 'முதல் நாளில் மூன்று பேர் மனு செய்த நிலையில், இரண்டாவது நாளில் ஆறு பேர் மனு செய்தனர். ஒரு சுயேட்சை மற்றொரு மனு செய்ததால், 10 ஆக உயர்ந்தது. தொடர்
விடுமுறைக்கு பின் இறுதியாக வரும், 17ல் மட்டுமே மனுத்தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது' என்றனர்.

