/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிலாளியை கொன்ற நண்பர் உள்பட 7 பேர் கைது 'இன்ஸ்டா'வில் பெண்ணிடம் பேசியதால் 'சம்பவம்'
/
தொழிலாளியை கொன்ற நண்பர் உள்பட 7 பேர் கைது 'இன்ஸ்டா'வில் பெண்ணிடம் பேசியதால் 'சம்பவம்'
தொழிலாளியை கொன்ற நண்பர் உள்பட 7 பேர் கைது 'இன்ஸ்டா'வில் பெண்ணிடம் பேசியதால் 'சம்பவம்'
தொழிலாளியை கொன்ற நண்பர் உள்பட 7 பேர் கைது 'இன்ஸ்டா'வில் பெண்ணிடம் பேசியதால் 'சம்பவம்'
ADDED : மே 29, 2025 01:30 AM
சேலம் கட்டட தொழிலாளியை அடித்துக்கொன்ற விவகாரத்தில், அவரது நண்பர் உள்பட, 7 பேரை, போலீசார் கைது செய்தனர். இதற்கு, 'இன்ஸ்டாகிராம்' மூலம் ஒரு பெண்ணிடம் தொழிலாளி பேசியதால், அவரது நண்பரே ஆத்திரம் அடைந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
சேலம், சூரமங்கலம், அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த, பெருமாள் மகன் அஜித்குமார், 21. கட்டட தொழிலாளியான இவர் கடந்த, 26ல், அரியாகவுண்டம்பட்டியில் உள்ள சேமிப்பு குடோன் பின்புறம், சுடுகாடு பகுதியில் இறந்து கிடந்தார். சூரமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், அஜித்குமார் தலை பின்புறம் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், அஜித்குமாரின் நண்பர்களை பிடித்து விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
அஜித்குமாரின் நண்பர் கார்த்தி, 24. இவர் திருமணமான உறவு பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். அப்போது அஜித்குமாரும், அந்த பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பேசியுள்ளார். இதை அறிந்த கார்த்தி, அஜித்குமாரை மிரட்டியுள்ளார். ஆனால் அஜித்குமார் தொடர்ந்து பேசிய நிலையில் கடந்த, 25ல் கார்த்தி, அஜித்குமாரை மது அருந்த அழைத்தார். அவரும் வந்தார்.
தொடர்ந்து மது அருந்திய நிலையில், கார்த்தி, அவர்களது நண்பர்களான மணிகண்டன், 23, அருண்குமார், 21, வசந்த், 22, வேலன், 24, விக்ரம், 25, ஆகியோர் சேர்ந்து, அஜித்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் அவர் இறந்துவிட்டார்.
நண்பர்கள், 5 பேரை நேற்று(நேற்று முன்தினம்) கைது செய்தோம். முக்கிய நபரான கார்த்தி உள்பட, 2 பேரை தேடிய நிலையில், வழிப்பறி வழக்கில், பள்ளப்பட்டி போலீசார், கார்த்தியை கைது செய்தது தெரிந்தது. அவரை, கொலை வழக்கிலும் இன்று(நேற்று) கைது செய்தோம். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய, 17 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.