/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளத்தில் கவிழ்ந்த டவுன் பஸ்சால் 7 பேர் படுகாயம் மொபைலில் பேசியபடி ஓட்டிய டிரைவர் 'சஸ்பெண்ட்'
/
பள்ளத்தில் கவிழ்ந்த டவுன் பஸ்சால் 7 பேர் படுகாயம் மொபைலில் பேசியபடி ஓட்டிய டிரைவர் 'சஸ்பெண்ட்'
பள்ளத்தில் கவிழ்ந்த டவுன் பஸ்சால் 7 பேர் படுகாயம் மொபைலில் பேசியபடி ஓட்டிய டிரைவர் 'சஸ்பெண்ட்'
பள்ளத்தில் கவிழ்ந்த டவுன் பஸ்சால் 7 பேர் படுகாயம் மொபைலில் பேசியபடி ஓட்டிய டிரைவர் 'சஸ்பெண்ட்'
ADDED : பிப் 13, 2025 03:18 AM
ஆத்துார்: கல்லுக்கட்டு மலைக்கிராமத்துக்கு சென்ற டவுன் பஸ், 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில், டிரைவர் உள்பட, 7 பேர் படுகாயம-டைந்தனர். மொபைல் போனில் பேசியபடி பஸ் ஓட்டியதால், டிரைவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று காலை, 9:00 மணிக்கு, அரசு டவுன் பஸ், பைத்துார் வழியே கல்லுக்கட்டு மலைக்கிராமத்துக்கு சென்று கொண்டிருந்-தது. கெங்கவல்லி, ஆணையாம்பட்டியை சேர்ந்த, டிரைவர் செல்-வராஜ், 55, ஓட்டினார்.
பெரியகருப்பு கோவில் அருகே, மேடான சாலையில் ஏறிய-போது, எதிரே தனியார் பள்ளி வாகனம் வந்தது. அப்போது, பஸ் நிற்காமல் பின்னோக்கி வந்தது. உடனே தற்காலிக பஸ் கண்-டக்டர் ராமலிங்கம், 25, குதித்து, சக்கரம் முன் பெரிய கல்லை வைத்தார். அந்த கல்லை உடைத்து, சாலையோரம், 15 அடி பள்-ளத்தில் உள்ள கலியபெருமாள் தோட்டத்தில், தலைகீழாக பஸ் கவிழ்ந்தது. சாலையோரம் தடுப்பு இல்லாததால் பஸ், 'அப்பளம்' போன்று நொறுங்கியது.
பஸ்சில் இருந்தவர்களை, மக்கள் மீட்டனர். இதில் கல்லுக்கட்டு அரசு தொடக்கப்பள்ளியில், 2ம் வகுப்பு படிக்கும் காமேஸ்வரி, 6, ஐந்தாம் வகுப்பு படிக்கும் கவிப்பிரியா, 9, அதே பள்ளி சத்து-ணவு அமைப்பாளர் ஜெயமணி, 55, கூலித்தொழிலாளியான ஆத்-துாரை சேர்ந்த ரம்யா, 28, தவளப்பட்டி தர்மர், 60, சிறுமி நிஷா, 4, டிரைவர் செல்வராஜ் படுகாயமடைந்தனர். இவர்கள், ஆம்-புலன்ஸ் மூலம் ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்-டனர். மாணவர்களுக்கு எடுத்துச்சென்ற முட்டைகள், பஸ்சில் உடைந்து கிடந்தன. ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், 'பிரேக் பாதிப்பு இல்லை. செல்வராஜ், விபத்துக்கு முன், மொபைல் போனில் பேசியபடி சென்றது தெரிந்தது. அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, சேலம் கோட்ட போக்குவரத்து பொது மேலாளர் கோபாலகி-ருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்' என்றனர்.
அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் தொகுதி, எம்.எல்.ஏ., ஜெயசங்-கரன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.
காலாவதி பஸ்
விபத்துக்குள்ளான பஸ், 2024 ஜூலை, 27ல் காலாவதியாகியுள்-ளது. பஸ்சின் புகை சான்று, 2025 ஜன., 2ல் காலாவதியாகியுள்-ளது. இதுகுறித்து போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், '15 ஆண்டுக்கு மேல் இயக்கப்படும் பஸ்சுக்கு, ஆர்.சி., நீட்டிப்பு செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. அதன்படி விபத்துக்குள்-ளான பஸ்சுக்கு, 2025 செப்., 30 வரை, தற்காலிக ஆர்.சி., வழங்-கப்பட்டுள்ளது' என்றனர்.

